அனுஷ நட்சத்திரம்; மகா பெரியவரின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :556 days ago
கோவை; மாதம்தோறும் வரும் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறும். அதன்படி ஐப்பசி அனுஷ நட்சத்திரத்தில் காஞ்சி மகா பெரியவரின் மகோத்சவம் விழா கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம்கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள சங்கரா மினி ஹாலில் நடைபெற்றது. விழாவில் மகா பெரியவரின் உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.