உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கஜமுகாசூரன் வீதியுலா நிகழ்ச்சி

லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கஜமுகாசூரன் வீதியுலா நிகழ்ச்சி

புதுச்சேரி; லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தர்சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, கஜமுகாசூரன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.


புதுச்சேரி லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தர்சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த 2ம் தேதி மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு,  முதல் கால யாக சாலை பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனை அடுத்து, 2ம் நாள் விழாவான, 3ம் தேதி இரண்டு  மற்றும் மூன்றாம் கால  யாக பூஜை நடந்தது. பின்னர் முருகன் சாமி இந்திர விமானத்தில் வீதியுலா நிகழ்ச்சியும். தொடர்ந்து, முருகன் சாமி, சூரிய பிரபையில் வீதியுலா காட்சி வீதியுலா நடந்தது.  அதனை தொடர்ந்து, நேற்று நான்காம் கால மற்றும் ஐந்தாம் கால யாக பூஜையும்,  முருகன், ரிஷப வாகனத்தில், வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இன்று ஆறாம் கால பூஜையுடன், நவ வீரர்கள் சம்ஹார வேல் அபிஷேகம் அடுத்து, கஜமுகாசூரன் மற்றும் விநாயகர், நவவீரர்களுடன், முருகன் சாமி வீதியுலாவில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !