கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா ; நாளை சூரசம்ஹாரம்
                              ADDED :358 days ago 
                            
                          
                          
புதுச்சேரி; புதுச்சேரி கவுசிக பாலசுப்பரமணியர் கோவிலில் சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. புதுச்சேரி சுப்பையா சாலை மோரேசன் வீதியில் உள்ள செல்வவிநாயகர், வீரபாகு தேவர் வள்ளி தெய்வானை உடனுறை கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 72ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று 4வது நாள் விழாவில் யானைமுகன் சம்ஹாரம் நடந்தது. முன்னதாக காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர். இன்று 5ம் நாள் உற்சவத்தில் இரவு சிங்கமுகன் சம்ஹாரம் புறப்பாடும், தொடந்து இரவு வேல் வாங்குதல் உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, நாளை இரவு சூரசம்ஹாரம், 8ம் தேதி காலை திருக்லயாணம் உற்சவம் நடக்கிறது. 19ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.