வளர்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராகி அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :702 days ago
கோவை; கோவை சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ஐப்பசி வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.