உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை தர்ம விநாயகர் தர்மராஜா கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி

சென்னை தர்ம விநாயகர் தர்மராஜா கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி

சென்னை; அத்தியாலுப்பேட்டைலிங்கி செட்டி தெருவின் கோடியில் எழுந்தருளயிருக்கம்  தர்ம விநாயகர் தர்மராஜா திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முரு முருகப் பெருமானுக்கு கந்தசஷ்டி பெருவிழா கடந்த  03ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 7 நாட்கள் இன்று (08-11-2034) வரை நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை. மாலை யாகசாலை பூஜையும் விசேஷ அலங்கார தீபாராதனையும் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. விழாவில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் பெரும் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !