சாத் பூஜை : சென்னை மெரினா கடற்கரையில் வடமாநிலத்தவர்கள் வழிபாடு
ADDED :404 days ago
சென்னை: சாத் பூஜையை முன்னிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மெரினா கடற்கரையில் சூரியனுக்கு பூஜைகள் செய்து ஏராளமான வடமாநில பக்தர்கள் வழிபட்டனர்.
சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லநடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவானது நான்கு நாட்களுக்கு நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர். வட இந்திய பண்டிகையான இது, வடமாநிலத்தார் அதிகம் இருப்பதால் தற்போது சென்னையிலும் பிரபலமாகி வருகிறது. சாத் பூஜையின் கடைசி நாளான இன்று சென்னை மெரீனா கடற்கரையில் பெருமளவில், வடமாநிலத்தார், புனித நீராடி சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சூரியனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.