உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலவருக்கு வராகநதி கரையில் சாயாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

வேலவருக்கு வராகநதி கரையில் சாயாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

பெரியகுளம்; பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடத்திய வேலவருக்கு, நேற்று வராகநதி கரையில் பால், தயிர், மஞ்சள்பொடி, பன்னீர், பஞ்சாமிருதத்தால் சாயாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து வராகநதியில் வேலவரை, அர்ச்சகர் கார்த்தி தீர்த்தவாரி செய்தார். மாலையில் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வழக்கறிஞர் அம்பாசங்கர் அன்னதானம் வழங்கினார். ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வடுகபட்டி வள்ளி தெய்வசேனா செந்தில் முருகன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !