திருக்கோஷ்டியூரில் ஏகாதசி உற்சவம்!
ADDED :4736 days ago
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில், ஏகாதசி உற்சவம் நடந்தது. பெருமாள், பூதேவி,ஸ்ரீதேவியருடன் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார். பெருமாளுக்கு திருவாராதனம் நடந்தது. திருக்கோட்டியூர் நம்பி திருமாளிகையிலிருந்து திருவேங்கடச்சாரியார் கைசிகப் புராண திருவோலையுடன், பட்டு,பருத்தி மரியாதையுடன் வரவேற்றனர். கோவிலில், கைசிகப் புராணம் வாசித்தனர். பிரம்மரத பல்லக்கில் திருமாளிகை சேர்க்கையுடன், ஏகாதசி பூஜை நிறைவடைந்தது.