அண்ணாமலையாருக்கு இத்தாலி பக்தர்கள் ரூ. 5.60 லட்சம் காணிக்கை!
ADDED :4736 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலுக்கு, இத்தாலி நாட்டைச் சேர்ந்த பக்தர்கள், 5.60 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா நடந்து வருகிறது. மகா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், மதுரை காந்தி கிராம நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.இத்தாலி நாட்டைச் சேர்ந்த, சிவலோக ஆன்மிக ஆசிரமத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்தனர். அவர்கள், தீபம் ஏற்றும் நெய்க்கு காணிக்கையாக, 5.60 லட்சம் ரூபாயை, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதியிடம் வழங்கினர். தொடர்ந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசித்தனர்.