கர்நாடகா கோவிலுக்கு வஸ்திர மரியாதை
ADDED :354 days ago
மதுரமங்கலம்; ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மதுரமங்கலம் கிராமத்தில், வைகுண்டப் பெருமாள் மற்றும் எம்பார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து, கர்நாடகா மாநிலம், மேல்கோட்டை செல்வ நாராயண பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் வஸ்திர மரியாதை வழங்குவது வழக்கமான நிகழ்வாகும். நேற்றுமுன்தினம் நடந்த நடப்பாண்டு நிகழ்வில், காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமரதுரை, கோவில் செயல் அலுவலர் ராஜா இளம்பெருவழுதி, கோவில் அறங்காவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.