பரமக்குடி சிவன் கோயில்களில் நவ.15ல் அன்னாபிஷேக விழா
ADDED :349 days ago
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் நவ.15 அன்று அன்னாபிஷேக விழா நடக்கிறது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் 23ம் ஆண்டு என்னாபிஷேக விழா நவ.15ல் நடக்க உள்ளது. அன்று மதியம் இரண்டு முப்பது மணிக்கு அனுக்கையுடன் விழா துவங்கி, கும்ப ஸ்தாபனம் ஹோமம் மகாபூர்ணாகுதி நடக்கும். தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு மகா அன்னாபிஷேகம் நடந்த தீபாராதனை காண்பிக்கப்படும். பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதே நாளில் அன்னாபிஷேகம் நடந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மேலும் எமனேஸ்வரம் சொர்ணகுஜாம்பிகை, எமனேஸ்வரமுடையவர் கோயில் மற்றும் நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி கோயில் என அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக விழா நடக்கிறது.