கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED :297 days ago
புதுச்சேரி; கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், தெப்ப உற்சவம் நடந்தது. புதுச்சேரி, ரயில் நிலையம் சுப்பையா சாலையில், கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், கந்தர் சஷ்டி, சூரசம்ஹார விழா, கடந்த 2ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 7ம் தேதி சூரசம்ஹார விழா நடந்தது. அதனை அடுத்து, 8ம் தேதி, திருக்கல்யாண நிகழ்ச்சி, நேற்று இரவு, வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில், தெப்ப உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக சாமி தரிசனம் செய்தனர்.