உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா ஆரத்தி வழிபாடு

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா ஆரத்தி வழிபாடு

மயிலாடுதுறை; அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையினர் இணைந்து காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரதயாத்திரையினை ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடத்தி வருகின்றனர். 14வது ஆண்டாக கடந்த மாதம் 20ம் தேதி கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் தொடங்கிய இந்த யாத்திரை குழுவினர் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்திற்கு வந்தனர். ராமானந்தமகராஜ், வேதானந்தஆனந்தா சுவாமிகள் முன்னிலையில் காவிரித்தாய்க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். இதில் துலாக்கட்ட காவிரி பாதுகாப்பு கமிட்டி தமிழ்செல்வன், அப்பர்சுந்தர், முத்துக்குமரசாமி உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !