உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

கூடலூர்; கூடலூர், முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேகம் திருவிழா சிறப்பாக நடந்தது.


கூடலூர், தேசிய நெடுஞ்சாலை நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள, முக்கூடல் லிங்கேஸ்வரர் கோவில் 9ம் ஆண்டு அன்னாபிஷேக திருவிழா மற்றும் பூஜைகள் சிறப்பாக நடந்தது. காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு சிறப்பு பூஜைகள் நடந்தன. பகல் 12:30 மணிக்கு லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழா வில் திரளான பக்தர்கள் பங்கேற்று லிங்கேஸ்வரர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நந்தட்டி மாதேஸ்வரன் கோவிலில், அன்னாபிஷேகம் பூஜை சிறப்பாக நடந்தது. நம்பாலக்கோட்டை சிவன்மலை சிவன் கோவிலில், சிறப்பு பூஜைகளும் அன்னாபிஷேகமும் சிறப்பாக நடந்தது. பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !