ஊத்துக்கோட்டை செஞ்சுலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :337 days ago
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே, தொம்பரம்பேடு கிராமம், செஞ்சுலட்சுமி நகரில், பக்தர்கள் பங்களிப்பு மற்றும் சாய்பாபா அறக்கட்டளை இணைந்து பழுதடைந்த செஞ்சுலட்சுமி அம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி துவங்கியது. பணி முடிந்து இன்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கோவில் அருகே யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய குடத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். காலை, 11:00 மணிக்கு கலசநீர் அம்மன் சிலை மீது ஊற்றப்பட்டது. பின் மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.