விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கார்த்திகை சோமவார வழிபாடு
ADDED :686 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கார்த்திகை சோமவார பூஜை சிறப்பாக நடைபெற்றது.
விளமல், பதஞ்சலி மனோகரர் கோயிலில், நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் சிறப்பாக செய்திருந்தார்.