உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிடங்கரை கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

கிடங்கரை கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்; உத்திரமேரூர் ஒன்றியம், கிடங்கரை கிராமத்தில், முனீஸ்வரன் மற்றும் சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி உள்ளிட்ட யாக கால பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க வேதவிற்பன்னர்கள் ,முனீஸ்வரன் மற்றும் சப்த கன்னியம்மன் விக்ரஹங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !