புதுச்சேரி கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் வீரபாகு உற்சவம்
ADDED :690 days ago
புதுச்சேரி; சூரசம்ஹார விழாவையொட்டி, கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், வீரபாகு உற்சவம் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகே சுப்பையா சாலை கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், 72ம் ஆண்டு, சூரசம்ஹார விழா நடந்தது. கடந்த 16ம் தேதி சூரிய பிரபை உற்சவம், தொடர்ந்து, நேற்று முன்தினம் இந்திர விமானத்தில், சாமி வீதியுலா காட்சி நடந்தது. அதையடுத்து, நிறைவு விழாவையொட்டி, நேற்று வீரபாகு சுவாமி நந்திய வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, சண்டிகேஷ்வரர் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.