கார்த்திகை செவ்வாய்; பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
                              ADDED :346 days ago 
                            
                          
                          
கோவை; கோவை, பட்டேல்ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. விழாவில் மூலவர் விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.