உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோவிலில் மத்திய அரசின் நிதிக்குழு தலைவர் தரிசனம்

ராமேஸ்வரம் கோவிலில் மத்திய அரசின் நிதிக்குழு தலைவர் தரிசனம்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய அரசின் 16வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா சுவாமி தரிசனம் செய்தார். நேற்று இரவு 7:50 மணிக்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த அவரை, ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ், ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் வரவேற்றனர். பின், சுவாமி சன்னதி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் அரவிந்த் பனகரியா தரிசனம் செய்தார். கோவில் குருக்கள் பிரசாதம் வழங்கினர். பின் ராமேஸ்வரத்தில் தனியார் விடுதியில் ஓய்வு எடுத்தார். இன்று காலை தனுஷ்கோடி மற்றும் தங்கச்சிமடத்தில் பிரதமர் நிதியில் கட்டிய வீடுகளை ஆய்வு செய்ய உள்ளார். இதன்பின், ராமநாதபுரத்தில் மத்திய அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வில் நிதிக் குழு உயர் அதிகாரிகள், தமிழக அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !