உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் ரோப்கார் சேவை மீண்டும் துவக்கம்

பழநி முருகன் கோயில் ரோப்கார் சேவை மீண்டும் துவக்கம்

பழநி; பழநி முருகன் கோயில் ரோப்காரில் பராமரிப்பு பணி நிறைவு பெற்ற நிலையில் இதன் சேவை நேற்று மீண்டும் துவங்கப்பட்டது. பழநி முருகன் கோயிலுக்கு ரோப் காரில் மூன்று நிமிடத்தில் செல்லமுடியும். பராமரிப்பு பணிக்காக அக். 7 முதல் இதன் சேவை நிறுத்தப்பட்டது. கம்பி வடம், சக்கரங்கள், பேரிங், ரப்பர் புஷ்கள் உள்ளிட்ட பாகங்கள் சரிபார்க்கப்பட்டன. இயந்திரத்தின் உறுதி தன்மையும் சோதனை செய்யப்பட்டது. நவ. 16ல் பெட்டிகள் பொருத்தப்பட்டன. நவ.18ல் ஒரு பெட்டியில் 300 கிலோ வீதம் எடை ஏற்றப்பட்டு ரோப் கார் சோதனை ஓட்டம் நடந்தது. ஆய்வு வெற்றிகரமாக இருந்ததையடுத்து நேற்று முதல் மீண்டும் சேவை துவங்கப்பட்டது. கோயில் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் ரோப்காரில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !