திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
உளுந்தூர்பேட்டை; திருநாவலூர் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத பக்தஜனேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத பக்தஜனேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 17, 18, 19, 20ம் தேதிகளில் காலை 7 மணி அளவில் வேத பாராயணம், திருமுறை பாராயணம், காலை 9 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், பூர்ணஹதி தீபாரதனை வழிபாடு நடந்தது. மாலை 6 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, பிரவேச பலி, வாஸ்து சாந்தி தீபாராதனை வழிபாடு நடந்தது. இன்று காலை 7.40 மணியளவில் ஸ்ரீ மனோன்மணி அம்பிகா சமேத பக்த ஜனேஸ்வரர் சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த், உளுந்தூர்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செண்பகவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.