உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 800 ஆண்டு பழமையான மருந்தீஸ்வரர், பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்

800 ஆண்டு பழமையான மருந்தீஸ்வரர், பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்


காஞ்சிபுரம்; உத்திரமேரூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்யாடுபாக்கம் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக  விழா நடைபெற்று 12ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை ,லட்சுமி ஹோமம் , வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம் பூர்ணாஹூதி உள்ளிட்ட யாக கால பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தில், புனித கலச நீர் ஊற்றி தீபாராதனைகள் காண்பித்து கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில்  இந்து சமய அறநிலையத் துறை உத்திரமேரூர் சரக ஆய்வாளர் பிரித்திகா, அறங்காவலர் குழு தலைவர் லெனின் மற்றும் கிராம பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !