புனித சவேரியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா துவக்கம்!
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் பங்கு ஆலய ஆண்டு பெருவிழா துவங்கியது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கொடியேற்றத் துடன் துவங்கியது.ஆலயத்தில் கொடியை சித்தானங்கூர் எம்மாவூஸ் ஆன்மிக மைய நிறுவனர் பீட்டர் அபீர் ஏற்றினார். பங்கு தந்தை பால் தெலாமூர், உதவி பங்கு தந்தை ஜான் ராபர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து புனித சவேரியார் ஆலயத்தில் வரும் 29ம் தேதி வரை தினந்தோறும் மாலை 5.30 மணிக்கு தேர்பவனியும், மறையுரை, தேவநற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும் 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு பாவசங்கீர்தன வழி பாடும், அடுத்த மாதம் 1ம் தேதி தியானமும், 3ம் தேதி பெருவிழா தேர்பவனியும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 4ம் தேதி காலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.