திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :328 days ago
திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகே கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு, இன்று கார்த்திகை சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடத்தப்பட்டன. ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.