உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன காப்பு அலங்காரத்தில் காரமடை சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிப்பு

சந்தன காப்பு அலங்காரத்தில் காரமடை சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிப்பு

கோவை; காரமடை அருகே உள்ள சின்னத்தொட்டி பாளையம் வெல்லாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தவர்ஷினி உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை  சொர்ண நாதஸ்வர பைரவருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 108 திரவிய மூல மந்திர ஹோமம்,  மகா பூர்ணாகுதி, மந்திர புஷ்பம், தசோட சாந்தி, மகாதீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சர்வ அபிஷேகம், கலச அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை முடிந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அமிர்தவர்ஷினி உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில் தலைவர் என்.எஸ். நஞ்சப்பன். செயற்குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !