களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :411 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஏரிக்கரையோரம் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாத இரண்டாவது வார சோமவாரத்தையொட்டி நேற்று இரவு மூலவருக்கு 108 சங்காபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் அக்னீஸ்வரர் அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.