குன்று வளர்ந்த பிடாரி அம்மன் கோயிலில் பாலாலயம்
ADDED :395 days ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலை குன்றுவளர்ந்த பிடாரி அம்மன் கோயிலில் திருப்பணி மேற்கொள்வதற்காக பாலாலயம் நடந்தது. பிரான்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இகோயில் குன்றக்குடி ஆதீன நிர்வாகத்திற்குட்பட்ட பழமையான கோயிலாகும். இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம், கிராம மக்கள் முடிவுசெய்தனர். இதனை தொடர்ந்து இன்று பாலாலயம் நடந்தது. நவ. 26 ல் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. உமாபாதி சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வழிபாடு நடந்தது. திருப்பணிகளை பொன்னம்பல அடிகள் துவக்கிவைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.