உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரி சன்னதியில் ‘முதல் சோறு’; ஐயப்பனுக்கு பூஜிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது

சபரி சன்னதியில் ‘முதல் சோறு’; ஐயப்பனுக்கு பூஜிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது

சபரிமலை; சபரிமலையில் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மரக்கூட்டம் முதல் வலிய நடை பந்தல் வரை பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 18-ம் படி ஏறி அய்யப்பனை தரிசனம் செய்தனர். பச்சிளம் குழந்தைகளுக்கு சபரிமலை ஐயப்பன் சன்னதியில் ‘முதல் சோறு’ ஊட்டும் நிகழ்வு நடந்தது. ஐயப்பன் விக்ரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாத உணவை பக்தர்கள் குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.


புகார் தெரிவிக்கலாம்; சபரிமலை பகுதியில் இயங்கும் ஹோட்டலில் தரமற்ற உணவு, கெட்டுப்போன உணவு, அதிகமான விலை கூறினால் அது குறித்து சபரிமலை சன்னிதானம் – 7593861757, பம்பை – 8592999666, நிலக்கல் – 7593861768,  ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !