திருப்புத்தூர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :343 days ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் சிவகங்கை ரோடு செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் விநாயகர், புற்று அம்மன் சன்னதிகள் உள்ளன. இங்கு அபூர்வமான திருவோட்டு மரம் வளர்ந்துள்ளது. இக்கோயிலுக்கு திருப்பணிகள் நடந்து நேற்று காலை யாகசாலை பூஜைகள் துவங்கின. மாலையில் முதலாம் காலயாக பூஜைகள் நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள் துவங்கின. பூஜை நிறைவடைந்து பூர்ணாகுதிக்கு பின்னர் கலசங்கள் புறப்பாடாகி காலை 11:00 மணிக்கு விமான கலசத்தில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பொதுமக்கள் கும்பாஷேகத்தை தரிசித்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.