உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோற்றுத்துறைநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

சோற்றுத்துறைநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறைநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் பிரிவு, எஸ்.எம்.பி.,நகர் அன்னபூரணி தாயார் உடனமர் சோற்றுத்துறைநாதர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சுவாமிக்கு, பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. மேலும், விநாயகர், முருகன் மற்றும் பிற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று, சிவபுராணம் உள்ளிட்ட பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !