உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகன்பூண்டியில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா

திருமுருகன்பூண்டியில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா

அவிநாசி; திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதர் சுவாமி கோவிலில், 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் உற்சவமூர்த்திகளின் ஆலய பிரவேசம், நேற்று முன்தினம் நடைபெற்றது. மங்கள வாத்தியம் முழங்க வேத பாராயணம், தேவாரம், பன்னிரெண்டுதிருமறை பாராயணம் ஆகியவற்றுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை நாயன்மார் மற்றும் தொகையடியார் விக்கிரஹங்கள் கண் திறப்பு நிகழ்ச்சியும் விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம்,பஞ்சகவ்யம், கலச பூஜை மற்றும் பிரதிஷ்டை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு ஹோம பூஜை, அபிஷேகம் நடத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், சோமாஸ்கந்தர் உடன், 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ருத்ராபிஷேக குழுவினர், மிராசுதார்கள், அறங்காவலர் குழுவினர், சிவனடியார்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !