சித்தகிரி முருகன் கோவிலில் கார்த்திகை மகா தீப விழா
ADDED :4771 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, நேற்று மாலை 3 மணிக்கு அண்ணாமலையார் கலச பூஜை நடந்தது.மாடவீதி வழியாக சித்தகிரி முருகன் கோவில் வளாகத்திற்கு கலசத்தை கொண்டு சென்றனர். சித்தகிரி முருகன் கோவிலில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மீனவ குலத்தினர் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாட்டினை செய்தனர்.இதே போல் வளத்தியில் மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் 1008 அகல் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. மலை மீது தீபம் ஏற்றப்பட்டது.முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.