பாண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4771 days ago
திருச்செங்கோடு: பாண்டீஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இருந்து, 400 அடி உயரத்தில், பாண்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து, திருகுட நன்னீராட்டு விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, பாண்டீஸ்வரர், பாண்டீஸ்வரியம்மாள், விநாயகர் ஸ்வாமிகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.