உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கீத ஆராதனையில் 25 ஆண்டு பூர்த்தி செய்த செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள்

சங்கீத ஆராதனையில் 25 ஆண்டு பூர்த்தி செய்த செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள்

பாலக்காடு; குருவாயூர் ஏகாதசி செம்பை சங்கீத உற்சவத்தில் 25 ஆண்டுகள் தொடர்ந்து சங்கீத ஆராதனை செய்த செம்பை வித்யா பீடம் ஆசிரியர்கள். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை வித்யா பீடம் என்ற கலை கூடம். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பாபுராஜ், பிரியதர்ஷன். இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக குருவாயூர் ஏகாதசி திருவிழாவை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தில் கொடர்ந்து சங்கீத ஆராதனை நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை இவர்கள், தனது சீடர்களான ரமேஷ் மற்றும் சந்தோஷுடன் சேர்ந்து தங்களது 25ம் ஆண்டு சங்கீத ஆரதனையை பூர்த்தி செய்துள்ளனர். இது குறித்து பாபுராஜ் மற்றும் பிரியதர்ஷன் கூறியதாவது: செம்பை வைத்தியநாத பாகவதரின் ஆசியால் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி திருவிழாவை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து சங்கீத ஆராதனை நடத்த முடிந்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அளிகிறது. அதேபோல் மூலவரின் திருநடையில் தொடர்ந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஆக காணுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !