18 அடி உயர வன பத்ரகாளியம்மன் கோவிலில் நவசக்தி மகா யாகம்
ADDED :277 days ago
பல்லடம்; பல்லடம் அருகே, வனபத்ரகாளியம்மன் கோவில், ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, நல்லூர்பாளையம் கிராமத்தில், 18 அடி உயரத்துடன் ஸ்ரீஅதர்வண பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். நேற்று, இக்கோவில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் சிறப்பு வேள்வி வழிபாடுகளை துவக்கி வைத்தார். விநாயகர் பூஜை, நவகிரக வேள்வி, லட்சுமி பராசக்தி வேள்வி ஆகியவற்றுடன் ஆண்டு விழா துவங்கியது . தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் நவசக்தி மகா யாகம் நடந்தது. இதையடுத்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீஅதர்வண பத்ரகாளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.