மன்னார்குடியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
ADDED :277 days ago
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில், மூவாநல்லுாரில், நகராட்சி சார்பில், எரிவாயு தகன மேடை கட்ட நேற்று, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, பள்ளத்தில், மண்ணுக்குள் புதைந்த நிலையில் சுவாமி சிலைகள்தெரிந்துள்ளன. உடனடியாக, அங்கிருந்த இரண்டு சிலைகளை மீட்டனர். தகவல் அறிந்த, மன்னார்குடி தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் வருவாய் துறையினர், இரண்டு சிலைகளையும் கைப்பற்றி, கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தனர். அதிகாரிகள் கூறுகையில், ‘தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பின், சுவாமி சிலைகள் பற்றிய விபரம் தெரியவரும்’ என்றனர்.