உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானுார் பிரம்மோற்சவம்; மோகினி அலங்காரத்தில் உலா வந்த பத்மாவதி தாயார்

திருச்சானுார் பிரம்மோற்சவம்; மோகினி அலங்காரத்தில் உலா வந்த பத்மாவதி தாயார்

திருப்பதி; திருச்சானுார் பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருமலையில், ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து உற்சவங்களும், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி, கார்த்திகை மாதம், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை பத்மாவதி தாயார் மோகினி அவதாரத்தில் பளபளக்கும் நகைகள் மற்றும் வண்ண வஸ்திரங்களுடன் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் திருமலையின் பீடாதிபதிகள், தேவஸ்தான அதிகாரி ஜே சியாமளா ராவ், வீரபிரம்மம், கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !