மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில் மூல நட்சத்திர சிறப்பு அபிஷேகம்
ADDED :338 days ago
காரமடை; காரமடை அடுத்துள்ள மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.