உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் விழாக்கோலம்; கும்பாபிஷேக விழா வரும் 6ம் தேதி துவக்கம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் விழாக்கோலம்; கும்பாபிஷேக விழா வரும் 6ம் தேதி துவக்கம்

ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா வரும், 6ம் தேதி முதல் துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வரும், 12ம் தேதி நடக்கிறது.  இதற்காக, 52  கலசங்கள் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது,  யாக சாலையில் ஒன்பது குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழா வரும், 6ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மங்கள  இசை, வேதபாராயணத்துடன் துவங்குகிறது. 7ம் தேதி காலை, 7:00 மணிக்கு வேதபாராயணம், காலை, 8:30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, மாலை, 4:00 மணிக்கு திருமுறை பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, 7:30 மணிக்கு வேதபாராயணம், காலை, 9:00 மணிக்கு நவக்ரஹ ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்; மாலை, 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தொடர்ந்து, 9ம் தேதி காலை, 9:00 மணிக்கு யாகசாலை அலங்காரம், தீபாராதனை, மாலை, 5:30 மணிக்கு முதற்கால யாக பூஜை, திரவியாஹுதி, பூர்ணாஹுதியும்; 10ம் தேதி காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும்; இரவு, 7:00 மணி முதல், 8:00 மணிக்குள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 11ம் தேதி காலை, 8:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, திரவியாஹுதி, பூர்ணாஹுதி, மாலை, 4:00 மணிக்கு வேதபாராயணம், மாலை, 5:30 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடக்கிறது. 12ம் தேதி காலை, 7:35 மணிக்கு ஆறாம் கால யாக பூஜையும், நாடி சந்தானம்,  காலை, 8:45 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, காலை, 9:15 மணிக்கு மாசாணியம்மன் விமானம், ராஜ கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்; காலை, 9:30 மணிக்கு மூலாலய கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. அன்று மாலை, 5:00 மணிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை, அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !