உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 12 சுவாமி திருக்குடைகளை மாட வீதி உலா

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 12 சுவாமி திருக்குடைகளை மாட வீதி உலா

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை அருணாச்சலம் ஆன்மீக சேவை சங்கம் சார்பில் நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் 12 சுவாமி திருக்குடைகளை மாட வீதி உலா வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். ஆன்மீக சேவை சங்கம் சார்பில் நடந்த இந்த திருக்குடை ஊர்வலத்தில் சிவன், பார்வதி, முருகன், வேடத்துடன் பக்தர்கள் நடனமாடி சென்றது வெகுவாக அனைவரையும் கவர்ந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !