உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு சாஸ்தா – 17; எதிரி பயமா... வேலம்பாளையம் தர்மசாஸ்தா!

தினமும் ஒரு சாஸ்தா – 17; எதிரி பயமா... வேலம்பாளையம் தர்மசாஸ்தா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேலம்பாளையத்தில் தர்மசாஸ்தா என்ற அய்யனாரப்பன் அருள் செய்கிறார். 


கருவறையில் உள்ள அய்யனார் கையில் கத்தியுடன் பூர்ணா, புஷ்பகலாவுடன் காட்சி தருகிறார். இவர் எதிரே யானை வாகனம் உள்ளது. தீய சக்திகளுக்கு இவரே சத்துரு என்றும், வியாபாரம், தொழில் விருத்திக்கு இவரே முதலாளி என்றும், திருமண தடை நீக்குவதிலும், குழந்தை பாக்கியம் வரம் கொடுப்பதில் வள்ளல் என போற்றுகின்றனர் பக்தர்கள். விசேஷ வழிபாடுகள் அமாவாசை, பவுர்ணமியில் நடக்கிறது. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மாசியில் கருப்பனாருக்கு ஆடு, கோழி, பன்றி பலியிட்டு முப்பூஜை விழா நடக்கும். வளாகத்தில் குதிரை, யானை, நாய் உள்ளிட்ட வாகனங்கள், விநாயகர், சப்த கன்னிமார், பெருமாள், கருப்பனார் ஆகியோர் உள்ளனர். 


ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில், 6 கி. மீ., 

நேரம் : காலை: 9:00 – 10:00 மணி. 

தொடர்புக்கு: 9976795354, 9791874366


அருகிலுள்ள தலம்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் 

நேரம்: காலை 7:00 – 1:00 மணி, மாலை 4:30 – 11:30 மணி

தொடர்புக்கு: 94438 26099



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !