உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா; சந்தனக்காப்பு அலங்காரத்தில் யோக பைரவர்

திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா; சந்தனக்காப்பு அலங்காரத்தில் யோக பைரவர்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு அஷ்ட பைரவ யாகத்துடன் சம்பக சஷ்டி விழா துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்து வருகிறார். விழாவின் மூன்றாம் நாள் வெண் சந்தனக்காப்பு அலங்காரத்தில் யோக பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தினமும் காலை மாலையில் யாகசாலை பூஜைகளுடன் நடக்கும் விழாவானது டிச., 6ல் சம்பக சஷ்டியிடன் நிறைவு பெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !