கார்த்திகை சஷ்டி; கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :672 days ago
கோவை; ஆர். எஸ். புரம், உழவர் சந்தை, வின்சென்ட் காலனி பகுதியில் அமைந்துள்ள வர சக்தி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள கல்யாண சுப்பிரமணியர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.