நீலாவதி அம்மன், விநாயகர், நவகிரக கோவில்களில் கும்பாபிஷேகம்
ADDED :335 days ago
வில்லியனுார்; சேதராப்பட்டு பழைய காலனியில் புதியதாக கட்டப்பட்ட நீலாவதி அம்மன் உடன் விநாயகர், முருகன் மற்றும் நவகிரக கோவில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 4ம் தேதி மாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜை, 5ம் தேதி காலை இரண்டாம கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், அமைச்சர் சாய்சரவணன்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.