வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு திருக்குடைகள்
ADDED :399 days ago
வேலூர்; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோவிலில் இருந்து திருக்குடைகள் எடுத்து செல்லும் வைபவம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டீஸ்வரர் கோவிலில் இருந்து இந்து ஆலய ரட்சன சமிதி சார்பில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப திருவிழாவிற்கு திருக்குடைகள் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு வெள்ளிகிரீடம் வழங்குவதற்காக மேளதாளங்கள் முழங்க பூஜைகள் செய்து, சிவனடியார்கள் துறவிகள் சிவதாண்டவம் ஆடிய வண்ணம் ஊர்வலமாக திருவண்ணாமலை சென்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடைகள் இன்று மாலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கபடும்.