மனிதர்களாகப் பிறந்தவர்களை மகான்கள் என்று போற்றிக் கொண்டாடுவது சரிதானா?
ADDED :4722 days ago
மனிதர்களில் உயர்ந்தவர்களை, அதாவது தெய்வம் போல் பாரபட்சமின்றி உதவுபவர்களை மகான் என்று வேதங்கள் கூறுகின்றன. உண்மை, தவம், தியாகம், மக்கள் தொண்டு, மனதால் கூட நெறி பிறழாமை இது போன்ற குணங்கள் ஒட்டு மொத்தமாக ஒருவரிடம் இருந்தால் அவர் தான் மகான். மகாத்மாவாக போற்றப்பட வேண்டியவர் அவர். தைத்ரீய உபநிஷத் என்னும் வேதப்பகுதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தங்களைத் தாங்களே மகான்களாகக் காட்டிக் கொள்பவர்களை வைத்து, உண்மை மகான்களைப் போற்றத் தவறிவிடாதீர்கள்.