ஏழு கங்கை அம்மன் திருவிழா; காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சீர் வரிசை
ADDED :317 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் அம்மனுக்கு சீர் வரிசை ( பூஜை பொருட்கள்) கொண்டு செல்லப்பட்டது.
காளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு, காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் அம்மனுக்கு சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சியை தேவஸ்தான செயல் அலுவலர் பாபி ரெட்டி மேற்கொண்டார். முன்னதாக சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் பூஜைப் பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்து, மேளத் தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்றனர். சீர் வரிசை பொருட்கள் கொண்டுச்செல்லும் வழியில் நான்கு மாட வீதிகளில் பெண்கள் மஞ்சள் நீரை ஊற்றி வரவேற்பு அளித்தனர். விழாவில் எம்எல்ஏ சுதிர் ரெட்டி மற்றும் பாஜக மாநில செயலாளர் கோலா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.