கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம்
ADDED :661 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கார்த்திகை மாதம் சர்வ ஏகாதசி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த சர்வ ஏகாதசி தினத்தை முன்னிட்டு கொடிசியா வெங்கடாஜலபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் தங்க காப்பு கவசத்துடன் சர்வ அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.