மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
269 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
269 days ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட பறம்புமலையாம் திருக்கொடுங்குன்றம் எனும் பிரான்மலையிம் அடிவாரத்தில் மூன்று நிலைகளில் சிவனும், பார்வதியும் கோயில் கொண்டுள்ளனர். ஆகாய தளத்தில் மங்கைபாகர் தேனம்மை, பூமி தளத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி, பாதாளத்தில் திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதாம்பிகை ஆக அருளாட்சி புரிகின்றனர். 2500 அடி உயர இம்மலை உச்சியில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி பக்தர்களால் புதிதாக தயாரித்து வழங்கப்பட்ட கொப்பரைக்கு உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கார்த்திகை தீபக்குன்றில் கொப்பரை பிரதிஷ்டை செய்யப்பட்டு மாலை 4:45 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அருகே உள்ள பாலமுருகன் குன்றிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபங்களை பார்த்த பின்னரே சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபங்களை ஏற்றினர். மலை உச்சிக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி லட்சதீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவபுரிபட்டி சுயபிரகாச ஈஸ்வரர், சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாதர் கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சேவுகப்பெருமாள் ஐயனார் உள்ளிட்ட கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
269 days ago
269 days ago